» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

திங்கள் 26, ஆகஸ்ட் 2019 12:33:55 PM (IST)

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செத்த முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிற்குள் சுவர் எகிறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரத்தை கைது செய்தனர். கடந்த வாரம் முழுக்க ப. சிதம்பரம் கைது இந்திய அரசியலையே உலுக்கிக் கொண்டு இருந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். 

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ப .சிதம்பரத்திற்கு பெயில் வழங்க முடியாது என்று கூறினார். மேலும் ப. சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட சிபிஐ மூலம் கஸ்டடி இன்றோடு முடிகிறது. அதே சமயம் இதே வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறையும் முயன்று வருகிறது. ப. சிதம்பரத்தின் கஸ்டடியை நீட்டிக்கவும் சிபிஐ கோரிக்கை வைத்து உள்ளது.

இந்த ஐஎன்எக்ஸ் வழக்கில் இன்று இரண்டு விதமான மனுக்களை ப. சிதம்பர தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஒரு மனு அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய கூடாது என்று ப.சிதம்பரம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். அதேபோல் இரண்டாவது வழக்கு ப. சிதம்பரத்தின் முன் ஜமீனை டெல்லி ஹைகோர்ட் நீக்கியதற்கு எதிரான வழக்கு ஆகும். ப. சிதம்பரத்தின் முன் ஜாமீனை டெல்லி ஹைகோர்ட் நீக்கியது தவறு, அதனால அவரை கைது செய்ததும் தவறு என்று கூறி இந்த மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செத்த முன் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. முன் ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டதால் முன் ஜாமீன் வழக்கை விசாரிக்க முடியாது என்று மனுவை நீதிபதிகள் பானுமதி, ஏ எஸ் போபண்ணா அமர்வு தள்ளுபடி செய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory