» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை: ஆளுநர் சத்யபால் மாலிக்

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2019 9:56:41 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று ஆளுநர் சத்யபால் மாலிக் இன்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அதிரடியாக நீக்கப்பட்டது. மேலும், மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை காரணமாக முக்கியத் தலைவர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் வெளித்தொடர்பு இல்லாமல் இருக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக மாநில நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ராகுல் காந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றனர். ஆனால், அவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு டில்லி திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். காஷ்மீரில் இன்னும் இயல்வு நிலை திரும்பவில்லை என்று குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மருந்து தட்டுப்பாடோ, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடோ இல்லை என்று ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறுகையில், ”தகவல் தொடர்பு கட்டுப்பாட்டால் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது என்றால், அது தீங்கா? எங்கள் இத்தகைய அணுகுமுறையால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. 10 நாட்கள் தொலைத்தொடர்பு இல்லாமல் இருக்கிறது. ஆனால், அனைத்து வசதிகளும் விரைவில் கிடைக்கும். பக்ரீத் பண்டிகையின்போது இறைச்சி, காய்கறிகள் மற்றும் முட்டைகளை வீடுவீடாக சென்று மக்களுக்கு வினியோகம் செய்தோம். மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை” என்று ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory