» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் தீப்பிடித்த சரக்கு கப்பல்: 28 பேர் உயிருடன் மீட்பு

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 4:20:45 PM (IST)



விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் தீ விபத்து ஏற்பட்ட சரக்கு கப்பலில் இருந்து 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் ஜாகுவார் என்ற சரக்கு கப்பல் இன்று காலை 11.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. இதனால், கப்பலில் இருந்த பணியாளர்கள் 29 பேர் உயிரை காக்க கடலில் குதித்தனர். கடலில் தத்தளித்த அவர்களில் 28 பேரை கடலோர காவல் படை மீட்டது. காணாமல் போன ஒரு பணியாளரை கடலோர காவல் படை தேடி வருகிறது. மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory