» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உ.பி. கிராமத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு : தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி கைது
வெள்ளி 19, ஜூலை 2019 5:25:33 PM (IST)

உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா கிராமத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 18 பேர் படுகாயமடைந்தனர். இவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆதரவு கூற காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநில கிழக்குப்பகுதி பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி இன்று சென்றார்.
பிரியங்கா காந்தி காரில் சென்றுகொண்டிருந்தபோது நாராயண்பூர் எனும் பகுதியில் பிரியங்கா காரை போலீசார், வழிமறித்து நிறுத்தினர். மேலும், கிராமத்திற்குள் செல்ல அவருக்கு அனுமதி கிடையாது. அவர் ஊருக்குள் நுழையாமல் திரும்ப வேண்டும் வலியுறுத்தினார்கள். மாநில காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்எல்ஏ அஜய் ராய், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரஜானத் சர்மா மற்றும் கட்சித் தொண்டர்களுடன் அந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்டார்கள்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, ”கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களை அமைதியான முறையில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். அதுவே எனக்கு தேவை. எதனால் என்னை தடுத்து நிறுத்தினார்கள்? சட்ட ரீதியாக என்னைத் தடுக்க என்ன ஆர்டர் அவர்களிடம் உள்ளது? அதை காண்பிக்கவேண்டும்” என்று பிரியங்கா வலியுறுத்தினார்.
என் மகன் வயதில் ஒரு வாலிபர் சுடப்பட்டு இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குடும்பத்தாரைக் காண வரும்போது போலீசார் அனுமதி மறுக்கின்றனர். எதனால் இவ்வாறு செய்கின்றனர்” என்று கேள்வி எழுப்பினார். தொடர் தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தியை, காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்த்து காவல்துறையினர் கைது செய்தனர். பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நித்யானந்தா இருப்பிடம் குறித்து 12-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 10, டிசம்பர் 2019 10:21:00 AM (IST)

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி : ஆட்சியை தக்கவைத்தார் எடியூரப்பா
செவ்வாய் 10, டிசம்பர் 2019 8:59:11 AM (IST)

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு: திமுக, காங்கிரஸ் எதிர்ப்பு
திங்கள் 9, டிசம்பர் 2019 5:15:18 PM (IST)

ஒரு வாரத்திற்குள் ஆவணங்களை ஒப்படையுங்கள்: பொன்.மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உததரவு!!
திங்கள் 9, டிசம்பர் 2019 5:09:57 PM (IST)

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜ வெற்றிமுகம்: எடியூரப்பா அரசு தப்பியது
திங்கள் 9, டிசம்பர் 2019 4:26:47 PM (IST)

இந்திய தண்டனை சட்டத்தில் விரைவில் திருத்தம்: டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா அறிவிப்பு
திங்கள் 9, டிசம்பர் 2019 8:59:54 AM (IST)
