» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் 5 நாட்களுக்கு மிகக் கன மழைக்கு வாய்ப்பு: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

வெள்ளி 19, ஜூலை 2019 4:11:06 PM (IST)

இன்று முதல் 5 நாட்களுக்கு கேரளாவின் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவ மழை தொடங்கி 40 நாட்கள் ஆன நிலையில், கேரளாவில் பருவமழை தீவிரமாகியுள்ளது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிகக் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்தி்ய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இடுக்கி மாவட்டத்துக்கு ஜூலை 20ம் தேதி வரையும், பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு ஜூலை 19ம் தேதி வரையும், எர்ணாகுளத்துக்கு 20ம் தேதியும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மிகக் கன மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்பரப்பு மோசமாக இருக்கும் என்றும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும், இதே நிலை ஜூலை 22ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory