» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் 12 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்

வெள்ளி 19, ஜூலை 2019 11:55:51 AM (IST)



மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகர்-நடிகையர் 12 பேர் டெல்லியில் பா.ஜனதாவில் இணைந்தனர்.

பாராளுமன்ற தேர்தல் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மேற்கு வங்கத்தை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர். இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களும் அடங்குவர். அதுவும் பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் பா.ஜனதா கணிசமான இடங்களை பெற்றதை தொடர்ந்து இந்த சம்பவங்கள் மேலும் அதிகரித்து வருகின்றன. 

அந்த வரிசையில் வங்க மொழி நடிகர்-நடிகையர் 12 பேர் நேற்று பா.ஜனதாவில் இணைந்தனர். இதில் ரிஷி கவுசிக், காஞ்சனா மொய்த்ரா, ருபஞ்சனா மித்ரா, பிஸ்வஜித் கங்குலி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர்களாகிய அவர்கள் கட்சியின் மாநில தலைவரான திலிப் கோஷ் முன்னிலையில் டெல்லியில் இணைந்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory