» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சேலம்-சென்னை 8 வழிசாலை திட்டம் வேண்டாம்: நிதின் கட்காரியிடம் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை

வெள்ளி 12, ஜூலை 2019 12:18:41 PM (IST)

சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு பதிலாக பழைய சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என நிதின் கட்காரியிடம் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

டெல்லியில் நேற்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரியை தி.மு.க. எம்.பி.க்கள் சேலம் எஸ்.ஆர். பார்த்திபன், கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி, தருமபுரி செந்தில்குமார், காஞ்சீபுரம் கணேசன் செல்வம், திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை ஆகியோர் நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், "தற்போது திட்டமிடப்பட்டுள்ள சேலம்-சென்னை 8 வழி சாலைக்கும், ஏற்கனவே சேலத்துக்கும், சென்னைக்கும் இடையே உள்ள 3 நெடுஞ்சாலைகளுக்கும் வெறும் 40 கி.மீ. மட்டுமே பயணதூரம் வித்தியாசம். இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவழித்து, விளைநிலங்களை சீரழிப்பது ஏற்புடையது அல்ல. எனவே, ஏற்கனவே உள்ள 3 சாலைகளை விளைநிலங்கள், பொதுமக்களின் சொத்துகளுக்கு பாதிப்பில்லாமல் விரிவாக்கம் செய்ய வேண்டுகிறோம்" என்று கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory