» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளாவில் சிறைக்கைதிகள் தயாரித்த சிக்கன் பிரியாணி ஆன்லைனில் விற்பனை

வெள்ளி 12, ஜூலை 2019 8:53:31 AM (IST)

கேரளாவில் சிறைக்கைதிகளால் தயாரிக்கப்படும் சிக்கன் பிரியாணி  ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வருகிறது.

கேரளாவில் உள்ள சிறைச்சாலைகளில் பீரிடம் புட் பாக்டரி (Freedom Food Factory) என்ற பெயரில் கடந்த 2011ம் ஆண்டு முதல் சிறை கைதிகள் உணவு சமைத்து விற்பனை செய்து வருகிறார்கள். உணவின் தரம் மற்றும் குறைவான விலை காரணமாக சிறை கைதிகள் தயாரித்த உணவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

அதில் குறிப்பாக கேரளா திரிச்சூர் மாவடத்தில் உள்ள வையூர் மத்திய சிறைச்சாலையில் ஆரம்பத்தில் சப்பாத்திகளை மட்டும் தயாரித்து விற்பனை செய்து வந்த கைதிகள், பின்னர் பிரியாணி, அசைவ உணவு வகைகள், கேக் போன்ற பேக்கரி வகைகளை ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். தற்போது சிறை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் 100 சிறை கைதிகள் நாள் ஒன்றுக்கு 25,000 சப்பாத்திகள் மற்றும் 500 பிரியாணிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். 

இந்நிலையில் சிறைச்சாலையில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் யோசனையை வையூர் மத்திய சிறைச்சலையின் டிஜிபி ரிஷிராஜ் சிங் முன்வைத்தார்.அதை தொடர்ந்து சிறை கைதிகள் தயாரிக்கும் உணவு வகைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது.அதற்காக ஆன்லைன் உணவு விநியோகஸ்தாரான ஸுவிக்கி நிறுவனத்துடன் வையூர் சிறைச்சாலை அதிகாரிகள் ஒப்பந்தம் செய்துள்ளனர். முதல்கட்டமாக 127 ரூபாய்க்கு பிரியாணி காம்போவை விற்பனை இன்று முதல துவங்கியது.   இந்த பிரியாணி காம்போவில் 300 கிராம் பிரியாணி, ஒரு வறுத்த கோழி லெக் பீஸ் , 3 சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலட், ஊறுகாய் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். கூடவே வாழை இலை ஒன்றும் தருகின்றனர்.

ஒரு நாள் சிறை அனுபவம்

கேரளாவின் சிறைச்சாலைத்துறை தன் வருவாயை அதிகரிக்க மேலும் ஒரு சுவாரஸ்யமான திட்டத்தை முன்வைத்துள்ளது. அதன்படி பொதுமக்கள் கேரளாவில் உள்ள வையூர் மத்திய சிறைச்சாலையில் ஒருநாள் தங்கி சிறை அனுபவத்தை பெறலாம். அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். வையூர் சிறைச்சலையில் அமைக்கப்படவுள்ள தனித்துவம் மிக்க சிறை அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory