» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடக - கோவா அரசியல் குழப்பம்: சோனியா, ராகுல் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

வியாழன் 11, ஜூலை 2019 3:30:57 PM (IST)



கர்நாடகா- கோவா மாநிலங்களில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயலும் பாஜக-வைக் கண்டித்து  பாராளுமன்ற வளாகத்தில் சோனியா,  ராகுல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடகாவில் நடந்து வரும் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளில் பாஜனதாவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவாவிலும் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று திடீரென பாஜக பக்கம் இழுக்கப்பட்டனர். பாஜகவின் இந்த நடவடிக்கைகளுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே கர்நாடகா- கோவா மாநிலங்களில் காங்கிரசை அழிக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் இன்று பெங்களூரிலும், டில்லியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சசி தரூர், அதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸ் எம்பிக்கள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள், "ஜனநாயகத்தை காப்பாற்று” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி நின்றனர். சுமார் 30 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, காங்கிரஸ் எம்பிக்கள் கலைந்து சென்று கூட்டத்தொடரில் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory