» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மிஸ் இந்தியா 2019’ அழகிப் போட்டி: ராஜஸ்தானின் சுமன் ராவ் பட்டம் வென்றார்

ஞாயிறு 16, ஜூன் 2019 10:10:04 PM (IST)பெமினா `மிஸ் இந்தியா வோர்ல்டு 2019 இந்திய அழகிப் போட்டியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ் (20) பட்டம் வென்று மகுடம் சூடினார்.

கல்லூரி மாணவியான சுமன் ராவ், தாய்லாந்து நாட்டில் நடைபெற இருக்கும் `மிஸ் வோர்ல்டு 2019 உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்பார். மும்பை சர்தார்  வல்லபாய் படேல் உள் விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை இரவு இந்த அழகிப் போட்டியின்  இறுதிச் சுற்று நடைபெற்றது. பாலிவுட் திரையுலகின் நடன அமைப்பாளர் ரெமோ டிசவுசா, நடிகை ஹுமா குரேஷி, சித்ராங்கதா சிங், பேஷன் டிசைனர் பால்குனி ஷானே பீகாக்கா, இந்திய கால்பந்து வீரர்  சுனில் சேத்ரி ஆகியோர் இந்த அழகிப் போட்டியின் நடுவர்களாக இருந்தனர்.

இந்த அழகிப் போட்டியை ஒட்டி, பிரபல நட்சத்திரங்கள் காத்ரினா கைப், விக்கி கவுஷல், மவுனி ராய் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் கரன் ஜோஹர், நடிகர் மனிஷ் பால் ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சியை நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory