» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பீகாரில் கடும் வெயிலுக்கு 44 பேர் பலி: பாட்னா நகரில் 19ம் தேதி வரை பள்ளிகள் மூடல்!!

ஞாயிறு 16, ஜூன் 2019 10:03:28 PM (IST)

பீகாரில் கோடை வெயிலால் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி வரை பாட்னா நகரில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

அவுரங்காபாத்தில் 22 பேரும் கயா மாவட்டத்தில் 20 பேரும் நவாடா மாவட்டத்தில் இரண்டு பேரும் அனல் புயல் காரணமாக உயிரிழந்ததாக பேரழிவு நிர்வாக கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர் பீகார் மாநிலத்தில் அவுரங்காபாத் கயா நவாடா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கடுமையான அனல் காற்று புயல் போல வீசிக் கொண்டிரு ப்பதாக மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார் .உயிரிழந்த 44 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 4 லட்சம் வழங்க மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அனல் காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்க அரசு அதிகாரிகள் முனைந்து செயல்பட வேண்டும் என நிதிஷ்குமார் கேட்டுக்கொண்டார்.பாட்னா, கயா ,பகல்பூர் ஆகிய நகரங்களிலும் அனல் காற்றின் வெப்ப அளவு மிகவும் அதிகமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சனிக்கிழமையன்று பீகார் மாநிலத்தில் சராசரி வெப்ப அளவு 45.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவு வெப்பம் பீகாரில் ஏற்பட்டதில்லை என கூறப்படுகிறது. வரும் 19ம் தேதி வரை பாட்னா நகரில் உள்ள அரசு தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது . ஜூன் மாதத்தில் இரண்டாவது முறையாக அனல் காற்று காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory