» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தான் வான்வெளியில் விமானம் பறக்காது: பிரதமர் மோடியின் பயணத்தில் திடீர் மாற்றம்

புதன் 12, ஜூன் 2019 5:49:09 PM (IST)

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கச் செல்லும் பிரதமர் மோடியின், விமானம் பாகிஸ்தான் வான்வெளிக்கு பதிலாக ஈரான் வழியாக செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலக்கோட்டில் சென்று தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு வந்தது. இந்த சம்பவத்துக்குப்பின் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறப்பதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி முதல் தடை விதித்தது. இந்தியாவில் இருந்து தெற்கு நோக்கிவரும் 11 வழித்தடங்களில் 2 வழித்தடத்தை மட்டுமே பாகிஸ்தான் தற்போது அனுமதித்துள்ளது. மற்ற வழித்தடங்களுக்கு அனுமதியளிக்கவில்லை.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்செக் நகரில் வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பாகிஸ்தான் வான்வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்ல அனுமதிக்குமாறு இந்திய அரசு பாகிஸ்தான் அரசிடம் கோரிககை விடுத்தது. பாகிஸ்தான் வழியாகச் செல்லாமல் இந்திய விமானம் மாற்றுப்பாதையில் சென்றால் கிர்கிஸ்தான் செல்ல நீண்ட தொலைவும், நேரமும் ஆகும். இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் கொள்கை ரீதியாக ஏற்பதாகவும், முறைப்படி பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.

இந்தநிலையில் கிரிகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்லாது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வான்வெளிக்கு பதிலாக ஈரான் அல்லது ஓமன் வழியாக செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறுகையில் ‘‘கிரிகிரஸ்தான் மாநாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடியின் விமானம் இரு வழிகளில் செல்லும் வாய்ப்பு குறித்து ஆலோசனை நடத்தினோம். ஆனால் இறுதியாக ஈரான், ஓமன் வழியாக செல்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory