» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாயு புயல் குஜராத்தில் நாளை கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

புதன் 12, ஜூன் 2019 5:34:16 PM (IST)

வாயு புயல், அதிதீவிர புயலாக மாறி, குஜராத் மாநிலம் போர்பந்தர் -டையூ இடையே நாளை காலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை 8-ம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்நிலையில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. அரபிக்கடலில் உருவான இந்த புயலுக்கு ‘வாயு’ என்று பெயர் சூட்டப்பட்டது.

வாயு புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,வாயு புயல், அதிதீவிர புயலாக மாறி நாளை காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - டையூ பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 145 கி.மீ முதல் 170 கி.மீ வரை இருக்கக் கூடும். மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory