» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தண்ணீர் பஞ்சம் நிலவும் நிலையில் குடிநீரால் கார்களை கழுவிய கோஹ்லிக்கு ரூ.500 அபராதம்

சனி 8, ஜூன் 2019 12:43:00 PM (IST)குடிநீரை கொண்டு கார்களை கழுவிய புகாரில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு குருகிராம் மாநகராட்சி ரூ.500 அபராதம் விதித்துள்ளது. 

நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வசிக்கும் குருகிராம் பகுதியிலும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. அவர் வசித்து வரும் டிஎல்எப் பேஸ் 1ல் 6 கார்கள் அவரது பயன்பாட்டிற்காக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கார்களை அவரது வீட்டு வேலைக்காரர்கள் குடிநீரை பயன்படுத்தி கழுவினர். 

இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் கோலி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, புகார் உண்மை என்று தெரிந்தது. இதையடுத்து கோலிக்கு ரூ.500 அபராதம் விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கோலி, டெல்லியின் புறநகரில் உள்ள குருகிராம் மாநகராட்சியின் வெறுப்புக்கு உள்ளாகி உள்ளார். 


மக்கள் கருத்து

உண்மைJun 9, 2019 - 09:52:52 AM | Posted IP 108.1*****

ஐநூறு ரூபாய் போதாதுங்க...ஒரு ஒருரூபாய் சேர்த்து 501 ஆ போட்டிருக்கலாம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory