» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொடர்ந்து 2ஆவது முறையாக பிரதமராகும் மோடி அத்வானி காலில் விழுந்து ஆசிபெற்றார்

வெள்ளி 24, மே 2019 5:11:35 PM (IST)தொடர்ந்து 2வது முறையாகப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்கவுள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 303 தொகுதியில் தனித்து வென்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகள் 47 தொகுதிகளில் வென்றுள்ளன. இதனால் தனிப்பெரும்பான்மை பலத்துடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார். உலகம் முழுவதுமிலிருந்து மோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் வேளையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அத்வானியின் காலில் விழுந்து மோடி ஆசிர்வாதம் பெற்றார்.

இதுகுறித்து ட்விட்டரில் கூறியுள்ள மோடி, "நாங்கள் மரியாதைக்குரிய அத்வானியை சந்தித்தோம். கட்சியைக் கட்டமைக்க பல ஆண்டுகளாக உழைத்த அத்வானி போன்றவர்களால்தான் பாஜகவின் தற்போதைய வெற்றி சாத்தியமானது. புதுப்புது தத்துவங்களை மக்களுக்கு கொடுத்தார்” என்று கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும் உடன் இருந்தார். பின்னர் இருவரும் மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியையும் சந்தித்தனர். 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு மறுத்ததால் அத்வானிக்கும், ஜோஷிக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கவில்லை.

இதனால் இருவருமே பாஜக தலைமையின் மீது கடுமையான அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது. பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் வாக்கு கொண்டிருக்கும் முரளி மனோகர் ஜோஷி தேர்தல் நாளன்று வாக்களித்துவிட்டு வெளியே வந்தபோது மோடிக்கு உங்கள் ஆசீர்வாதம் உண்டா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”நான் யார் அதற்கு? மக்கள் இருக்கிறார்கள்” என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் வெற்றி பெற்ற கையோடு அமித்ஷாவும், மோடியும் இருவரையும் சந்தித்துள்ளனர். இருவரையும் சந்தித்த படங்களை மோடி தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது. பாஜக தொண்டர்களிடத்திலும் மோடி உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மே 30ஆம் தேதி மீண்டும் மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்க வுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory