» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் ஆட்சி மாற்றம்.. ஜெகன் மோகன் ரெட்டி அலையில் வீழ்ந்தார் சந்திரபாபு நாயுடு!!

வெள்ளி 24, மே 2019 9:02:33 AM (IST)ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை இழக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. 

17வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. மக்களவை தேர்தலுடன் தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் ஆகியவையும் நடத்தப்பட்டன. இன்று காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. மக்களவை தேர்தல் முடிவுடன் சட்டமன்ற தேர்தல் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையும் நடந்துவருகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மண்ணை கவ்வியுள்ளது. 

175 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதில் 6ல் ஒரு பங்கைவிட குறைவான 23 தொகுதிகளில் மட்டுமே ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் முன்னிலை வகிக்கிறது.  எனவே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்க உள்ளார். மக்களவை தேர்தலிலும் தெலுங்கு தேசத்திற்கு மரண அடி விழுந்துள்ளது. ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் 16ல் ஒய்.எஸ்.ஆர் முன்னிலை வகிக்கிறது. வெறும் 4ல் மட்டுமே தெலுங்குதேசம் முன்னிலை வகிக்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory