» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பேட்ஸ்மேன் சதம் அடித்தபோதிலும், அணி தோல்வி: தேர்தல் முடிவு குறித்து சசி தரூர் வேதனை

வியாழன் 23, மே 2019 4:47:17 PM (IST)

தான் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது குறித்து  சசி தரூர் வேதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 340-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சியமைக்கிறது. வட மாநிலங்களில் ஒட்டுமொத்த தொகுதிகளையும் சுருட்டிய பாஜக, தென்மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. காங்கிரஸ் கட்சி வடமாநிலங்களில் படுதோல்வியடைந்துள்ளது. அதேவேளையில் கேரளாவில் 15 தொகுதிகளுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் தலைவர் சசி தரூர் வெற்றிபெறும் தருவாயில் உள்ளார்.

தான் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் ‘‘என்னுடைய முன்னிலை 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் உள்ளது. பேட்ஸ்மேன் சதம் அடித்த போதிலும், அவனுடைய அணி தோல்வி அடைந்தால் எப்படி இருக்குமோ? அதே உணர்வுதான் உள்ளது. இந்த கசப்பான எமோசனில் இருந்து வெளியேற சற்று காலம் தேவைப்படும்’’  என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிமே 24, 2019 - 09:44:40 AM | Posted IP 162.1*****

செம காமெடி - தப்பி பிழைத்து வந்துவிட்டு - சதம் அடித்து விட்டாராம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory