» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்களவைத் தேர்தலில் வரலாற்று வெற்றி: பிரதமர் மோடிக்கு மெஹபூபா முப்தி வாழ்த்து

வியாழன் 23, மே 2019 3:48:52 PM (IST)

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வரலாற்று வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு மெஹபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது. 290க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருவதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 51 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் அனந்த் நாக் தொகுதியில் தோல்வி அடைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக வெற்றி குறித்து மெஹபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், வரலாற்று வெற்றிக்கு  நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்.  இன்று  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய நாள். அமித் ஷாவைப் போன்ற ஒருவரை காங்கிரஸ் பெறுவதற்கான நேரம் இது என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory