» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திரா காந்தியைப் போல பாதுகாவலர்கள் மூலம் என்னைக் கொல்ல பாஜக சதி: கெஜ்ரிவால் புகார்

ஞாயிறு 19, மே 2019 9:45:35 AM (IST)

இந்திரா காந்தியைப் போல, என்னுடைய பாதுகாவலர்கள் மூலமே என்னைக் கொல்ல பாஜக சதி செய்வதாக, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றிருந்த  கெஜ்ரிவால் அங்கு ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்  கூறியிருப்பதாவது: இந்திரா காந்தியைப் போல, என்னுடைய சொந்த பாதுகாவலர்கள் மூலமே என்னைக் கொல்ல பாஜக சதி செய்து வருகிறது. என்னுடைய பாதுகாப்பு அதிகாரிகள் பாஜகவுக்கு தகவல் அளித்து வருகின்றனர். பாஜகவினர் ஒரு நாள் என்னைக் கொல்லப் போகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்த மாத ஆரம்பத்தில், டெல்லியில் தேர்தல் பிரச்சார ஊர்வலத்தின்போது  கெஜ்ரிவாலை ஒருவர் கன்னத்தில் அறைந்தார்.

தாக்கியவர் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த அதிருப்தியாளர் என்று டெல்லி போலீசார் கூறியிருந்தனர். நான் கொல்லப்படுவேன். அதைச் செய்தவர் ஆத்திரம் அடைந்த ஆம் ஆத்மி தொண்டர் என்று போலீஸ் கூறலாம். இதில் ஏதும் அர்த்தம் இருக்கிறதா? பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மீது, காங்கிரஸ் தொண்டருக்கு ஆத்திரம் இருந்தால், அவரை அந்த தொண்டர் தாக்கி விடுவாரா?  மோடி மீது பாஜக தொண்டருக்கு ஆத்திரம் இருந்தால், அவரை அந்த தொண்டர் தாக்கி விடுவாரா? என்று கெஜ்ரிவால் அப்போது கேள்வி எழுப்பி இருந்தார்.

பாதுகாவலர்கள் மூலமே தன்னைக் கொல்ல சதி என்று கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் அனில் மிட்டல் கூறியிருப்பதாவது: எல்லா அரசியல் கட்சிகளின் உயர் தலைவர்கள் பலருக்கும் டெல்லி போலீஸ் பிரிவு பாதுகாப்பு அளித்து வருகிறது. டெல்லி முதல்வருக்கு  பாதுகாப்பு அளிக்கும் அணியில் உள்ள பாதுகாவலர்கள் மற்றவர்களுக்கு நிகராக தங்கள் கடமையைச் செய்வதில் உறுதிபூண்டவர்கள். இவ்வாறு டெல்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

பிம்பிலிகா பிளாப்பிமே 19, 2019 - 09:00:46 PM | Posted IP 108.1*****

அடேயப்பா - பெரிய ஆளுதான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory