» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இமயமலையில் உள்ள கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு: குகையில் தியானம்!!

சனி 18, மே 2019 5:56:00 PM (IST)இமயமலையில் உள்ள கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள குகைக்கோயிலுக்கு நடந்து சென்றார். பின்னர் அங்கு தியானம் மேற்கொண்டார்.

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில், இமயமலையில் புகழ் பெற்ற கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. கேதார்நாத் கோயில் நடை அண்மையில் திறக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 3 மாதங்களாகவே பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். நேற்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் இமயமலையில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் உத்தரகண்ட் மாநிலம் ஜோலிகிராண்ட் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் வந்து சேர்ந்தார். கேதார்நாத் கோயிலில் வழிபாடு நடத்திய அவர் பின்னர் அங்கு நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நாளை 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பத்ரிநாத் கோயிலுக்கும் செல்கிறார். அங்கு நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார். பின்னர் பிரதமர் மோடி தியான குகைக்கும் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

பிம்பிலிகா பிளாப்பிமே 21, 2019 - 05:10:17 PM | Posted IP 172.6*****

நியூஸ் போடா சொல்லு அவர் சொல்லவில்லை கிறுக்கா - உன்னை போல - அவர்களாக போடுகிறார்கள்

தலைவர்மே 20, 2019 - 05:43:41 PM | Posted IP 173.2*****

நானும் தியானம் பன்றேன் சார். ப்ளஸ் நியூஸ்ல போடுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory