» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரப்ரி தேவி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சனி 18, மே 2019 5:33:53 PM (IST)

பீகாரில் முன்னாள் முதல் அமைச்சர் ரப்ரி தேவியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியும் பீகார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி பாடான் நகரில் உள்ள சர்க்குலர் சாலை பகுதியில் ஒரு பங்களா வீட்டில் வசித்து வருகிரார். முன்னாள் முதல் அமைச்சர் என்ற வகையில் இவரது வீட்டுக்கு 24 மணி நேரமும் ஆயுதமேந்திய வீரர்கள் காவல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். படை வீரர் கிரியப்பா கிரசூர்(29) என்பவர் தனது கைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தை சேர்ந்த அந்த வீரரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. தற்கொலைக்கு முன்தினம் அவரது மனைவியுடம் போனில் கடுமையான வாக்குவாதம் செய்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory