» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு : சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல்!!

சனி 18, மே 2019 5:02:19 PM (IST)கேள்விகள் இல்லாத பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பை கண்டித்து, அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்

பிரதமர் மோடி 2104ல் பிரதமராக பதவியேற்ற பின், 5 ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர்களை நேற்று டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்தில் சந்தித்தார். இதில் அனைத்து செய்தியாளர்கள் நாளிதழ், செய்தி தொலைக்காட்சி, இணையதள செய்தி ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து செய்தியாளர்களும் கலந்து கொண்டனர். ஆனால், இதில் பிரதமர் மோடி ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை. 

இதுபெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முன்னதாக பேசிய பாஜ தேசிய தலைவர் அமித் ஷா, "இந்த தேர்தலில் பாஜவிற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. வரும் மக்களவை தேர்தலிலும் பாஜ தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மீண்டும் பாஜ ஆட்சி அமைய வேண்டுமென்பதே மக்களின் எண்ணம். விவசாயிகள், பெண்களை கருத்தில் கொண்டு அரசு திட்டங்களை வகுத்து வருகிறோம். மோடி ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளதாக மக்கள் எண்ணுகின்றனர் என பாஜவின் வளர்ச்சி திட்டங்களை அமித்ஷா முன்வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மோடி, "பாஜவின் மக்களவை தேர்தல் பிரசாரம் சிறப்பாக முடிவடைந்துள்ளது. பரபரப்புரை முடிவடைந்துவிட்டதால் நான் சற்று நேரம் இழைப்பறலாம். பாஜ அரசின் 5 ஆண்டுகள் சாதனைகள் எண்ணி பெருமைப்படுகிறோம் என்றார். மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர் பதிலளிக்காமல், அமித் ஷா பதில் அளிப்பார் என்று அவர் தெரிவித்தார். இது, நாடு முழுவதும் பத்திரியார்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்தினை டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. "பிரதமா் நரேந்திர மோடி பத்திாிகையாளா் சந்திப்பில் கலந்து கொண்டதே பாதி வெற்றி" என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி கிண்டலாக ட்விட்டரில் கருத்து தொிவித்துள்ளாா். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இதுகுறித்து கூறுகையில் ‘‘பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கீ பாத்’ என்ற ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு உரையாற்றுவார். அந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோடை டிவி மூலம் நிகழ்த்தியது போல் இருந்தது. இது பாஜகவின் பிரியாவிடைக்கான (Farewell) பத்திரிகையாளர் சந்திப்பு. பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முடியாமல் அமைதியாக இருக்கும் நிலையே ஏற்பட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory