» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோடி-அமித்ஷா விவகாரத்தால் தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து மோதல்: சுனில் அரோரா விளக்கம்

சனி 18, மே 2019 3:54:25 PM (IST)

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் நடத்தை விதி மீறல் விவகாரத்தால் தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து மோதல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இது குறித்து விளக்கம் அளித்திருப்பதாவது, தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து மோதல் எழுந்திருப்பதாக வரும் சர்ச்சை தேவையற்றது. எந்த ஒரு விவகாரத்திலும் மூன்று தேர்தல் ஆணையர்களின் முடிவும் ஒரே மாதிரியாக இருக்காது. தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம்தான் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

இதுபோன்று பல்வேறு விவகாரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன என்றும், கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பானதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் நடத்தை விதி மீறல்கள் புகார் தொடர்பாக நடந்த கூட்டங்களில் தனது கருத்து ஏற்கப்படாததால் இனி, தேர்தல் ஆணையக் கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory