» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரக்யா தாகூர் 100 சதவீத ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி: சித்தராமையா கடும் தாக்கு

சனி 18, மே 2019 12:53:14 PM (IST)

பிரக்யா தாகூர் 100 சதவீத ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என  கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பிரக்யா தாகூர் 100 சதவீத ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரக்யா தாகூர் 100 சதவீத ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி. அதுபோன்ற ஒரு பெண்ணிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். இவரைப் போன்ற பலபேர் பாஜக-வில் உள்ளனர். இதுபோன்றவர்களை நாம் எவ்வாறு தேச பக்தர்களாகக் கருதுவது என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory