» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமித் ஷா பேரணி மீதான தாக்குதலுக்கு மம்தாவின் தோல்வி பயமே காரணம்: தேவேந்திர பட்னாவிஸ்

புதன் 15, மே 2019 10:55:06 AM (IST)

கொல்கத்தாவில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் நடைபெற்ற வன்முறைக்கு மம்தாவின் தோல்வி பயமே காரணம் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், பேரணியை நோக்கி கற்களை வீசினர். இதில் காயம் ஏதுமின்றி அமித் ஷா தப்பினார். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி வன்முறையாளர்களைக் கலைத்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கொல்கத்தாவில் பெரும் பதற்றம் நீடிக்கிறது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில், அமித் ஷா தலைமையில் நடைபெற்ற பேரணி கொல்கத்தாவின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. அப்போது வித்யாசாகர் கல்லூரி விடுதியில் மறைந்திருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர், பேரணியில் பங்கேற்றவர்களை நோக்கி சரமாரியாக கற்களை வீசினர்.  இதையடுத்து, பாஜக ஆதரவாளர்கள் அவர்களை விரட்டத் தொடங்கினர். இதில் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

இதனால், பேரணி பாதியிலேயே முடிவுக்கு வந்தது. இந்த வன்முறையால் கொல்கத்தா நகரம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், கொல்கத்தாவில் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் நடந்த தாக்குதலுக்கு மம்தாவின் தோல்வி பயமே காரணம் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்காளத்தில் தேர்தல் மம்தா ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வருகிறார். தன்னை எதிர்த்து யாரும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என வன்முறையை தூண்டிவிட்டு வருகிறார். எனவே, மக்களவைத் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory