» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஸ்ரீநகர் அருகே ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது தலைக்கு ரூ.2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டவன்

புதன் 15, மே 2019 10:33:00 AM (IST)தலைக்கு ரூ.2 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி ஸ்ரீநகர் அருகே கைது செய்யப்பட்டான்.

பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமதுவை பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன் அப்துல் மஜீத் பாபா. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவன். கடந்த 2007-ம் ஆண்டு, டெல்லியில் நடந்த துப்பாக்கி சண்டையில் போலீசிடம் சிக்காமல் தப்பியவன். இவனை பிடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தலைக்கு ரூ.2லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே சவுரா என்ற இடத்தில் பாபா பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், டெல்லி தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். காஷ்மீர் போலீசாரின் ஒத்துழைப்புடன் சோதனை நடத்தி பாபாவை பிடித்தனர். அவனை டெல்லிக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory