» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேர்தல் முடிவு வெளியான மறுநாள் பி எம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியீடு

வெள்ளி 3, மே 2019 11:06:42 AM (IST)

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் பி எம் நரேந்திர மோடி திரைப்படம் வரும் மே 24ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

பாராளுமன்ற தேர்தலையொட்டி பி.எம். நரேந்திர மோடி படம் வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

இந்த திரைப்படத்தில் அரசியல் பிரசாரம் கிடையாது, உத்வேகம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.

மேலும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், படத்தை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு  சீலிட்ட உறையில் அறிக்கையாக வைத்து கடந்த ஏப்ரல் 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 26ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம்தெரிவித்தது. மேலும் தேர்தல் முடியும் வரை பி.எம். நரேந்திர மோடி படம் வெளியிட தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் தேர்தல் முடிவுகள் வெளியாகும் (மே 23) நாளுக்கு, மறுநாள்(மே 24) வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இது குறித்து தயாரிப்பாளர் சந்தீப் சிங் கூறுகையில், ஒரு இந்திய குடிமகனாக சட்டத்தினை நான் மதிக்கிறேன். இந்த படம் வெளியிடப்படும் என கூறியதில் இருந்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் வெளியிட முடிவு செய்துள்ளோம். இனிமேல் எவ்வித சர்ச்சைகளும் எழாது என நம்புகிறேன். மேலும் வரும் மே 24ம் தேதி எந்த பாதிப்பும், தடையும் இன்றி படம் வெளியிடப்படும் எனவும் நம்புகிறேன் என கூறினார். 


மக்கள் கருத்து

உண்மைமே 3, 2019 - 04:04:22 PM | Posted IP 162.1*****

தாங்கள் சொல்வது உண்மை.. உண்மை..

ராமநாதபூபதிமே 3, 2019 - 02:24:24 PM | Posted IP 172.6*****

தயாரிப்பாளருக்கு இது ஒரு தேவை இல்லாத வேலை. ஒண்ணுமே செய்யாத அவரை பற்றி படம் எடுத்து என்ன செய்யபோகிறாரோ தயாரிப்பாளர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory