» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜிஎஸ்டி மூலம் ரூ.1.13 லட்சம் கோடி வரி வசூல் : மத்திய நிதியமைச்சகம் தகவல்

வியாழன் 2, மே 2019 4:08:27 PM (IST)

அறிமுகம் செய்தது முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும் மொத்தம் ரூ.1,13,865 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இதில் (சி) ஜிஎஸ்டி ரூ.21,163 கோடி, (எஸ்) ஜிஎஸ்டி ரூ.28,801 கோடி, ஒருங்கிணைந்த (ஐ) ஜிஎஸ்டி ரூ.54,733 கோடி (இறக்குமதி வரி ரூ.23,289 உட்பட) மற்றும் கூடுதல் வரி (செஸ்) ரூ.9,168 கோடி (இறக்குமதி வரி ரூ.1,053 உட்பட) வசூலாகியுள்ளது.

ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தில் விற்பனை கணக்கு விபரங்களை சமர்ப்பித்தோரின் மொத்த எண்ணிக்கை ஏப்ரல் 30, 2019 நிலவரப்படி 72.13 லட்சமாக இருந்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) அறிமுகம் செய்யப்பட்டது முதல் தற்போது தான் அதிகளவிலான வரி வசூலாகி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. அதிலும் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,03,459 கோடியாகும். இது இந்த ஒரு ஆண்டில் மட்டும் 10.05 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory