» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறி பிரபல நடிகரிடம் ரூ.15 லட்சம் பறிக்க முயற்சி: 2 நடிகைகள் கைது

வியாழன் 2, மே 2019 10:28:11 AM (IST)

மும்பையில் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறி பிரபல நடிகரிடம்  ரூ.15 லட்சம் பறிக்க முயனறதாக 2 நடிகைகளை போலீசார் கைது செய்துள்ளனர். 

நடிகைகள் ‘மீ டூ’வில் பிரபலங்கள் மீது பாலியல் புகார் சொல்லி திரையுலகை அதிரவைத்து வருகிறார்கள். நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் இதில் சிக்கி உள்ளனர்.  மீ டூ நடிகைகளுக்கு பாதுகாப்பு கேடயமாக உள்ளது என்று பலர் பாராட்டி உள்ளனர். ஆனால் இதை சில நடிகைகள் பட வாய்ப்பு தராதவர்கள் மீது பழிவாங்க பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது மீ டூவை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக ரோஹினி, ஷாரா சரவான் ஆகிய 2 மராத்தி நடிகைகள் போலீசில் சிக்கி உள்ளனர். இவர்கள் பிரபல மராத்தி நடிகர் சுபாஷ் யாதவுடன் இணைந்து நடித்துள்ளனர்.2 நடிகைகளும் சுபாஷ் யாதவை தொடர்புகொண்டு தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரப்பப்போவதாகவும், அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமானால் இருவருக்கும் ரூ.15 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர். நடிகைகளுக்கு 2 போலீஸ் அதிகாரிகள் உதவியாக இருந்துள்ளனர்.

இதனால் பயந்துபோன சுபாஷ் யாதவ் இருவருக்கும் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் அவர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோஹினி, ஷாரா சரவான் ஆகிய 2 நடிகைகளையும் கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த 2 போலீஸ் அதிகாரிகளும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory