» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த 3 பேர் ரயில் மோதி பலி : டெல்லியில் சோகம்

புதன் 1, மே 2019 12:30:05 PM (IST)

டெல்லியில் தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ எடுத்த 3 பேர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாமன், கி‌ஷண், சன்னி. இவர்கள் மூவரும் உறவினர்கள். இவர்கள் மூவரும் தங்கள் உறவினர் ஒருவர் திருமணத்திற்காக டெல்லிக்கு சென்று இருந்தனர். அவர்களுடன் தினேஷ் என்பவரும் டெல்லி சென்று இருந்தார். டெல்லியில் பானிபட் பூங்கா பகுதியில் அவர்கள் நேற்று மாலை செல்பி எடுத்தபடி இருந்தனர். அந்த பூங்கா பகுதி அருகில் உள்ள ரயில் தண்டவாளத்துக்குள் சென்று செல்போனில் செல்பி எடுத்தனர்.

அந்த சமயத்தில் அந்த தண்டவாளத்தில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது. தூரத்தில் வந்துக் கொண்டிருந்த ரயிலையும் சேர்த்து செல்பி எடுக்க வேண்டும் என்று அவர்கள் 4 பேருக்கும் ஆசை ஏற்பட்டது. தண்டவாளத்தின் மத்தியில் நின்றபடி அவர்கள் ரயில் வரும் திசையை நோக்கி செல்பி எடுத்தனர். மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்ததால் ரயில் அருகில் வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை.

கண் இமைக்கும் நேரத்திற்குள் ரயில் அவர்கள் மீது மோதியது. அப்போது தினேஷ் மட்டும் தண்டவாளத்தில் இருந்து வேகமாக குதித்து தப்பினார். சாமன், சன்னி, கி‌ஷண் மூவரும் ரயில் மோதி உயிரிழந்தனர். இதைப் பார்த்ததும் தினேஷ் அலறியபடி மயங்கி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் உடல் துண்டு துண்டாக சிதறி கிடந்ததைதான் அவர்களால் பார்க்க முடிந்தது. செல்பி மோகத்தில் அவர்கள் 3 பேரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory