» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மபியில ஆளும் காங்கிரஸுக்கு அளித்த ஆதரவு மறுபரிசீலனை: மாயாவதி அறிவிப்பு

புதன் 1, மே 2019 12:21:51 PM (IST)

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்த ஆதரவை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வென்றது. ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை 231 இடங்களில் காங்கிரஸ் 113 தொகுதிகளில் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவை. இதனால் 2 பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸுக்கு கொடுத்த ஆதரவை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக மாயாவதி தெரிவித்திருக்கிறார். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் குணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜோதிராதித்ய சிந்தியாவும், பகுஜன் சமாஜ் சார்பில் லோகேங்ந்திர சிங்கும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி லோகேங்ந்திர சிங் மாயாவதி கட்சியில் இருந்து விலகி தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கான புகைப்படத்தை ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்,

இந்நிலையில் பகுஜன் சமாஜ்வாதி வேட்பாளரை காங்கிரஸ் மிரட்டியுள்ளது. இதனால் லோகேந்திர சிங் காங்கிரஸில் இணைந்து கொண்டார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாயாவதி, மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு. கொடுத்து வரும் ஆதரவை மறு பரிசீலனை செய்யவுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.அரசு இயந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவதில் பாஜகவுக்கு, காங்கிரஸ் சற்றும் சளைத்ததில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், காங்கிரஸின் நடவடிக்கைகளுக்கு அஞ்சமாட்டோம், சொந்த சின்னத்தில் நின்று காங்கிரசுக்கு பதிலடி கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory