» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோடியின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: மம்தாபானர்ஜி வற்புறுத்தல்

புதன் 1, மே 2019 11:31:18 AM (IST)

பிரதமர் மோடியின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மம்தாபானர்ஜி வற்புறுத்தியுள்ளார். 

பிரதமர் மோடி கடந்த 29-ந்தேதி மேற்கு வங்காளம் மாநிலம் ஸ்ரீராம்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசும் போது, பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் மேற்கு வங்காளத்தில் தாமரை மலரும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 எம்.எல். ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். பா.ஜனதா வெற்றி பெற்றவுடன் 40 எம்.எல்.ஏ.க்களும் அக்கட்சியில் இருந்து விலகுவார்கள். மம்தாபானர்ஜி குறைவான எம்.பி.க்களுடன் பிரதமர் கனவு காணுகிறார் என்று பேசினார்.

இது தொடர்பாக மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா கூறும்போது, மோடி குதிரை பேரத்தில் ஈடுபடுவது போல் பேசுவது அவமானமானது. அவரது வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும். அவர் பிரதமராக நீடிக்க உரிமை கிடையாது. நேதாஜி போன்ற தலைவர்களை மக்கள் மதிக்கிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். ஆனால் மோடியை பார்த்து பயப்படுகிறார்கள். மேற்கு வங்காளத்தில் கால் பதிக்கலாம் என்று பிரதமர் மோடி பகல் கனவு காணுகிறார். அவரது கனவு நிறைவேறாது என்றார்.

இந்த நிலையில் மோடி பேச்சு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடி குதிரை பேரத்தை தூண்டும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பிரசாரத்தில் பேசி வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரது இந்த பேச்சு எங்களுக்கு அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியது. மோடியின் பேச்சுக்கு கடுமையான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். அவரது பேச்சு சட்ட விரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது.

40 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று மோடி கூறியதற்கு அவரிடம் ஆதாரத்தை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டும். அந்த ஆதாரங்களை தர மறுத்தால் தேர்தல் விதி முறைகளை மீறி ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்பட்டதாகவும் ஆத்திரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாகவும் நடவடிக்கை எடுத்து அவரது வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory