» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இமயமலையில் பனிமனிதன் நடமாட்டம்? இந்திய ராணுவம் புகைப்படங்களை வெளியிட்டது

செவ்வாய் 30, ஏப்ரல் 2019 4:18:09 PM (IST)இமயமலையில் எட்டி எனப்படும் பனிமனிதன் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறிய இந்திய ராணுவம் அதுதொடர்பான படங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பனிப்பிரதேசங்களான இமயமலையில் எட்டி எனப்படும் பனிமனிதன் வாழ்ந்து வருவதாக பலதரப்பட்ட கதைகளை நாம் கேட்டு வருகிறோம். இந்த எட்டிக்கள் சுமார் 15 அடிக்கும் மேல் மிகப்பெரிய உருவத்துடன் மனிதக்குரங்கு போன்ற தோற்றத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வகை எட்டிக்கள் இந்தியாவில் இமயமலை, ரஷியாவில் சைபீரியா, மத்திய மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளில் உள்ள பனிமலைகளில் வாழ்ந்து வருவதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், கதை மூலம் மட்டுமே கேட்டு வந்த இந்த எட்டிக்கள் இமயமலையில் இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் எட்டிக்களின் காலடி என்று கருதப்படும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,500 மீட்டர் உயரமுள்ள இமயமலையின் லாங்மாலே கார்கே எனுமிடத்தில் அமைந்துள்ள ராணுவத்தின் மகாலு தளத்தின் அருகே ஏப்ரல் 9-ஆம் தேதி மிகப்பெரிய காலடித்தடங்களை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இவை அனைத்தும் 32 இன்ச் நீளமும், 15 இன்ச் அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது கணக்கிடப்பட்டது. இந்த புகைப்படங்களை இந்திய ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory