» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் கேரளாவில் கைது

செவ்வாய் 30, ஏப்ரல் 2019 11:01:31 AM (IST)

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞரை கேரளாவில் தேசிய புலனாய்வு அமைப்பினர்   கைது செய்துள்ளனர்..

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என பல இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவரான ஜஹ்ரான் ஹாஷிம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய  29 வயது இளைஞர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ் அபூபக்கர் என்ற இளைஞரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்ததும், கேரளாவில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அத்துடன் ஜஹ்ரான் ஹாஷிமின் பேச்சுகளை ஒரு வருடத்திற்கும் மேலாக ரியாஸ் அபூபக்கர் தொடர்ச்சியாக கேட்டு பின்பற்றி வந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரியாஸ் அபூபக்கர் தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

முன்னதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேதிக்கப்பட்ட 6 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களும் ஜஹ்ரான் ஹாஷிம் பேச்சுகளை விரும்பி கேட்டது தெரியவந்தது. அவர்கள் தமிழகத்தில் உள்ள இந்த தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்பட்டது. காசர்கோட் நகரிலிருந்து குறைந்தது 15 பேர் காணாமல் போனதாக  ஒரு வழக்கு முதலில் ஜூலை 2016 இல் பதிவு செய்யப்பட்டது. இஸ்லாமிய அரசுக்கு போராடுவதர்காக   ஆப்கானிஸ்தானுக்கு 14 பேரும், சிரியாவிவிற்கு ஒருவரும் சென்றதாக பின்னர் தெரியவந்தது. 


மக்கள் கருத்து

நிஹாApr 30, 2019 - 11:28:51 AM | Posted IP 172.6*****

எப்படித்தான் மூளைசலவை செய்வார்களோ.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory