» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வணிகர்களிடம் கொள்ளை அடிப்பதற்காகவே ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டது: ராகுல்காந்தி தாக்கு

வெள்ளி 26, ஏப்ரல் 2019 10:38:21 AM (IST)

ஏழைகள், வணிகர்களிடம் கொள்ளை அடிப்பதற்காகவே ரூபாய் நோட்டு வாபஸ், ஜிஎஸ்டி  ஆகியவற்றை பாஜக அரசு அமல்படுத்தியது  என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜாலோரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:5 ஆண்டுகளுக்கு முன், "நல்ல நாள் வரும் என்ற முழக்கத்துடன் அவர்கள்(பாஜக) பிரசாரம் செய்தனர். ஆனால், நாட்டு மக்கள் அனைவரும் "காவலனே கள்வன் என்று தற்போது கூறி வருகிறார்கள். ரூபாய் நோட்டு வாபஸ், சரக்கு-சேவை வரியை அமல்படுத்தியது  ஆகியவை ஏழைகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து கொள்ளை அடிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட வழிமுறைகளாகும். 

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அநீதி இழைத்துவிட்டார்.  பிரதமர் மோடிக்கு நன்றி: காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டம், விவசாயிகளுக்கு பலனளிப்பதாக இருக்கும். நாட்டு மக்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வங்கிக் கணக்குகளில்தான் "நியாய் திட்டத்துக்கான பணத்தை டெபாசிட் செய்யப் போகிறேன். அந்தப் பணம், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், ஜிஎஸ்டி எளிமையாக்கப்படும், ஒரே ஆண்டில் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். வங்கிக் கடனை செலுத்தாததற்காக, எந்தவொரு விவசாயியும் சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள். விவசாயிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படாமல், சிவில் வழக்குகள் பதிவு செய்யப்படும். அனில் அம்பானி, லலித் மோடி, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட 15 தொழிலதிபர்கள், வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. அவர்களைத்தான் மோடி பாதுகாத்து வருகிறார். அவர்களில் வங்கிகளில் வாங்கிய கடன் தொகை ரூ.5.55 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளார் என்றார் ராகுல் காந்தி.


மக்கள் கருத்து

samiApr 29, 2019 - 08:34:35 PM | Posted IP 172.6*****

உண்மையை சொல்லமாட்டேன் என்று இருப்போர் - சொன்னால் நமது பக்கம் விழுந்துவிடும் - என்று இருப்போர் இப்படித்தான் சொல்வார்கள்

உண்மைApr 27, 2019 - 11:49:34 AM | Posted IP 162.1*****

சாமி வெளிநாட்டில் இருக்குதோ..

ஆசீர். விApr 27, 2019 - 11:42:34 AM | Posted IP 172.6*****

பாலாவின் கருத்து வரவேற்கத்தக்க ஒன்று. சாமி ஒரு முட்டாள் என்பதை மணிக்கொருமுறை நிரூபித்து கொண்டே இருக்கிறான்

சுரேஷ்Apr 27, 2019 - 10:23:05 AM | Posted IP 172.6*****

சாமிக்கு பைத்தியம் பிடித்து விட்டது விரைவில் தெருத்தெருவாக சட்டையை கிழித்து கொண்டு அலைய போகிறார் பாருங்கள்

சாமிApr 27, 2019 - 10:19:12 AM | Posted IP 172.6*****

காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட எல்லா பொருட்களுமே இப்போது விலை குறைவுதான் - அரிசி பருப்பு உப்பு புளி எல்லாம் - விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் - பெட்ரோல் தவிர மற்ற எல்லாமே விலை குறைவுதான் - கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டு என்று பொருள் இல்லை

பாலாApr 26, 2019 - 09:02:45 PM | Posted IP 162.1*****

ஆமா சாமி அவர்களே நீங்கள் கோமாவில் இருக்கிறீர்களா. எந்த பொருள் விலை குறைவு சொல்லுங்கள் பாப்போம் விலைவாசி உயர்வினால். நடுத்தர ஏழை மக்கள் அனைவரும் காரி துப்பி கொண்டிருக்கிறார்கள்.

சாமிApr 26, 2019 - 11:37:38 AM | Posted IP 172.6*****

இவனுக்கு பைத்தியமே பிடித்து விட்டது - GST வந்ததற்கு பிறகு அனைத்து பொருட்களும் விலை குறைவு - விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது - என்று அனைத்து மக்களும் சொல்கிறார்கள் - அது சரி - இவன் இந்திய பிரஜை இல்லையே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory