» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகா கூட்டணியில் இருப்பவர்களுக்கு பயங்கரவாதிகள் குறித்த கவலை இல்லை: பிரதமர் மோடி

வியாழன் 25, ஏப்ரல் 2019 5:21:02 PM (IST)

மகா கூட்டணியில் இருப்பவர்களுக்கு பயங்கரவாதிகள் குறித்த கவலை இல்லை என பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 18,23  ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்று மொத்தம் 3 கட்ட வாக்குப்பதிவு  முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் தர்பங்கா பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. பிரசாரத்தில் பிரதமர் மோடி, பீகார் முதல் அமைச்சர் நிதீஷ் குமார், துணை முதல் அமைச்சர் சுஷில் குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில் பிரதமர் மோடி பேசியதாவது: நடந்து முடிந்த 3 கட்ட வாக்குப்பதிவுகளின் நிலை, பாஜகவிற்கு சாதகமாக உள்ளதை நினைத்து எதிர்கட்சியான காங்கிரஸ் நடுங்கிக் கொண்டிருக்கிறது. மகா கூட்டணியில் இருப்பவர்கள், வாக்குப்பதிவு  இயந்திரங்களில் பழுது எனவும், பாலக்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டும் வருகின்றனர். 

பீகாரின் முதல் அமைச்சர் நிதீஷ் குமார், துணை முதல் அமைச்சர் சுஷில் குமார் ஆகியோர் மிகச்சிறிய கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கினர். இதனால் அவர்கள் மாநிலத்தையே ஒளிபெறச் செய்தனர். மக்களே, ஓய்வெடுங்கள். பயங்கரவாதிகளை ஒழிக்க உங்கள் காவலாளியாகிய நான் இருக்கிறேன். மகா கூட்டணியில் இருப்பவர்களுக்கு பயங்கரவாதிகள் குறித்த கவலை இல்லை. ஆனால் புதிய இந்தியா பயங்கரவாதிகளை ஒழிக்க பாடுபடும். நீங்கள் பாஜகவினருக்கோ, அதன் கூட்டணி கட்சியினருக்கோ வாக்களிக்கிறீர்கள் என்றால்,  உங்கள் காவலாளிக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

ஒருவன்Apr 27, 2019 - 06:24:50 PM | Posted IP 172.6*****

வடை நாட்டுக்காரன் நல்லா வாயில வடை சுடுவான் ...

ஆசீர். விApr 27, 2019 - 11:44:50 AM | Posted IP 172.6*****

அஞ்சு வருஷம் ஆட்சியில் இருந்து சோலியை முடிச்சாச்சு. இப்போ தேர்தலில் நீ என்னத்தை கிழித்தாய் என்று சொல்ல வழி இல்லை. ஒரே மதம் சம்பந்தப்பட்ட பிரச்னை, தீவிரவாதம் என்று உதார் விட்டுக்கொண்டே இருக்கிறாரு, மக்கள் வைப்பாங்க பெரிய ஆப்பா

சாமிApr 25, 2019 - 08:41:18 PM | Posted IP 172.6*****

இங்கே ஒருவர் கூட கண்டன அறிக்கை விடவில்லை - வாக்கு வாங்கி பறிபோய்விடும் ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory