» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கருப்பு பணத்தை கொண்டு ஓட்டுக்களை விலைக்கு வாங்க பாஜக திட்டம்: மம்தா குற்றச்சாட்டு

வியாழன் 25, ஏப்ரல் 2019 11:12:26 AM (IST)

கருப்பு பணத்தை கொண்டு ஓட்டுக்களை விலைக்கு வாங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றம்சாட்டினார். 

மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளி மாவட்டம் செரம்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசியதாவது: மோடி, நீங்கள் பொதுமக்களின் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை  தடை செய்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வலுக்கட்டாயமாக அமல்படுத்தினீர்கள்.  இதன் மூலம் வெள்ளையாக மாற்றப்பட்ட கருப்பு பணத்தை கொண்டு தேர்தலில் வாக்காளர்களின் ஓட்டுக்களை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளீர்கள். ஆனால் உங்களால் ஒருபோதும் மேற்குவங்கத்தில் வாக்குகளை பெற முடியாது. நீங்கள் தேர்தலில் தோற்கடிக்கப்படுவீர்கள் என்பது முன்கூட்டியே எழுதப்பட்ட விதி. 

மேற்குவங்கத்தில் பாஜ, துப்பாக்கிகள் மற்றும் குண்டர்களை இறக்குமதி செய்து வருகிறது. இதைக்கொண்டு மாநிலத்தில் தங்களுக்கு வாக்கு கிடைப்பதை உறுதி செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதை மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மாநிலத்தில் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்க அனுமதிக்க மாட்டேன். தேர்தல் நடப்பதை முன்னிட்டு மதுவுக்கு அனுமதி வழங்குவதற்கான லைசென்சை சிலருக்கு மோடி வழங்கியுள்ளார். இதில் நடைபெற்ற முறைகேட்டை தோலுரித்து அவரது உண்மையான முகத்தை உலகறிய செய்வோம். வாக்காளர்களே நீங்கள் நாட்டையும் நமது அரசியலமைப்பையும் காக்க வேண்டும் என விரும்பினால் மோடியை அதிகாரத்தில் இருந்து விரட்டுங்கள்.


மக்கள் கருத்து

சாமிApr 25, 2019 - 12:35:03 PM | Posted IP 172.6*****

சாரதா சிட்பண்ட் பணத்தை சொலறயா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory