» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

என்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மனைவி அபூர்வா கைது!!

புதன் 24, ஏப்ரல் 2019 5:49:11 PM (IST)உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் திவாரியை கொலை செய்ததாக அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். 

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும், அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரோகித்தின் மனைவி அபூர்வா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே, ரோகித்தின் தாயார் உஜ்வாலா, காவல்துறையில் அளித்த தகவல் விசாரணையின் போக்கை மாற்றியது. 

தன் மருமகள் அபூர்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பணம்தான் குறிக்கோள் என்றும், ரோகித்தின் சொத்தை அபகரிக்க விரும்பியதாகவும் உஜ்வாலா குற்றம்சாட்டினார்.  இதன் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது, ரோகித்தின் மனைவி மீது சந்தேகம் வலுத்தது. எனவே, அவரிடம் ஞாயிற்றுக்கிழமை போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் போலீசாரின் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது. எனவே, விசாரணையின் முடிவில் அபூர்வாவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

தமிச்செல்வன்Apr 25, 2019 - 10:38:20 AM | Posted IP 141.1*****

இந்த NTதிவாரிதான் தனது 84 வயதில் மத்தியபிரதேச கவர்னராக இருக்கும்போது மூணு பெண்களுடன் அம்மணமாக இருந்த வீடியோ வெளியாகியது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory