» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமராக வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை : அக்ஷய் நேர்காணலில் பிரதமர் மோடி பதில்!!

புதன் 24, ஏப்ரல் 2019 4:57:24 PM (IST)



பிரதமராக வேண்டும் என்று நான் ஒரு போதும் நினைத்தது இல்லை என்று அக்‌ஷய் குமாருடனான கலந்துரையாடலில் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பேட்டி கண்டார். இந்த பேட்டியின் போது பிரதமர் மோடி பல்வேறு சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டு உள்ளார். பிரதமர் மோடி பேட்டியின் போது கூறியதாவது: நான் சன்னியாசியாக வேண்டும் என்றுதான் நினைத்தேன், பிரதமராக வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. 

எனக்கு கோபம் வராததை பார்த்து  மக்கள் ஆச்சர்யபடுகிறார்கள். கோபப்படும் அளவுக்கு நான் எந்த சூழலையும் உருவாக்கி கொள்ளவில்லை. எனக்கு கோபம் வரும் அதை நான் ஒருபோதும் வெளிக்காட்டியதில்லை.  எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பு வரை எனக்கு வங்கி கணக்கு கிடையாது. ராணுவத்தில் சேர்ந்து  நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று நினைத்தேன். வரலாறு போற்றும் தலைவர்களின் சுயசரிதைகளை படிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. எதிர்க்கட்சிகளில் பல நண்பர்கள் எனக்கு உள்ளனர்" இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory