» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜகவில் இணைந்த ஹிந்தி நடிகர் சன்னி தியோல்: குருதாஸ்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிப்பு

புதன் 24, ஏப்ரல் 2019 11:59:50 AM (IST)பாஜகவில் இணைந்த ஹிந்தி நடிகர்  சன்னி தியோலுக்கு குருதாஸ்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

தாமினி, காயல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சன்னி தியோல். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் ஹிந்தி நடிகர் சன்னி தியோல் பாஜவில் நேற்று இணைந்தார். இதைத் தொடர்ந்து, அன்றைய தினமே அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.மகாராஷ்டிர மாநிலம், புணே விமான நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சன்னி தியோல் சந்தித்து பேசினார். அவர் பாஜகவில் இணையப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், அவர் அக்கட்சியில் இணைந்தார்.

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது தந்தை தர்மேந்திரா, முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான மறைந்த வாஜ்பாயுடன் நெருங்கி பழகினார். தற்போது பிரதமர் மோடியை ஆதரிக்க நான் வந்துள்ளேன். இந்தக் குடும்பத்துக்காக (பாஜக) என்னால் என்ன செய்ய முடியுமே அதை செய்வேன் என்றார். நடிகர் வினோத் கன்னா, குருதாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக இருந்தார். நிர்மலா சீதாராமன் கூறுகையில், "சன்னி தியோல் கட்சியில் சேரப் போகிறார் என்பது தெரிந்ததும், அவர் நடிப்பில் வெளியான "பார்டர்" திரைப்படம் குறித்து நினைவு வந்தது. தேசப்பற்று மிகுந்த திரைப்படம் "பார்டர். பிரதமர் மோடி மக்களுக்கு நன்மை செய்து வருவதை சன்னி தியோல் புரிந்துகொண்டிருக்
கிறார் என்றார்.


மக்கள் கருத்து

ஒருவன்Apr 25, 2019 - 09:38:18 PM | Posted IP 162.1*****

வயதான கூத்தாடிகள் சினிமாவில் வாய்ப்பில்லாதால் , எல்லாம் பிஜேபிக்கு அடிமை .. எல்லா கூத்தாடிகளுக்கு வாலிப வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ???

ராமநாதபூபதிApr 24, 2019 - 12:55:59 PM | Posted IP 162.1*****

இவரு நைனா ஒரு எம்பி, நைனாவோட வீட்டம்மா ஒரு எம்பி. இப்போ இவரு ஒரு வேட்பாளர். ஆனா இவங்க கூட்டம் வாரிசு அரசியலை பத்தி வாய் கிழிய கிழிய பேசும். போங்கடா போக்கத்த பசங்களா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory