» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: வாக்குப் பதிவுசெய்த பின்னர் பிரதமர் மோடி பேட்டி

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 11:41:27 AM (IST)



மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகமதாபாத்தில் தனது   வாக்கினை பதிவுசெய்த பின் பிரதமர் மோடி பேட்டியளித்தார்.

குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடிக்கு குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் வாக்கு உள்ளது. இதற்காக இன்று காலை குஜராத் வந்த பிரதமர் மோடி காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட அகமதாபாத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். வெடிகுண்டை விட மிக வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை. 

பயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டு என்பதை போல ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பது வாக்காளர் அட்டை. வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும். எனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்தன் மூலம் நான் அதிர்ஷ்டசாலி ஆனேன். வாக்களித்ததன் மூலம் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன். கும்பமேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதைபோல் வாக்களிப்பதன்மூலம் வாக்காளர் அதை உணரலாம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

உண்மைNov 6, 1556 - 01:30:00 PM | Posted IP 162.1*****

மோடி வேண்டாம் அண்ணே..

உண்மைApr 23, 2019 - 01:10:57 PM | Posted IP 162.1*****

மீண்டும் மோடி! வேண்டும் மோடி! ஜெய்ஸ்ரீராம்! ஜெய்ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory