» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இலங்கைக்கு சுற்றுலா சென்ற ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த 7பேர் கதி என்ன? குமாரசாமி அச்சம்

திங்கள் 22, ஏப்ரல் 2019 12:17:47 PM (IST)

கர்நாடகாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்ற மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த 7 பேர் மாயமான சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் திருநாளான நேற்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர், இவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 500-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் 7 பேர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு மாயமான சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சித் தலைவரும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி கூறியதாவது: இலங்கைக்கு சுற்றுலா சென்ற எங்கள் கட்சியைச் சேர்ந்த 7 பேரும் அங்கு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு பிறகு மாயமானது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 2 பேர் அந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக நான் இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து பேசி தகவல்களை பெற்று வருகிறேன் என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory