» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சாதி, மதத்தால் ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: உச்சநீதிமன்றம் உத்தரவு

திங்கள் 15, ஏப்ரல் 2019 5:36:41 PM (IST)

சாதி, மதத்தால் ஆதாயம் தேடும் வேட்பாளர்க மீது அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 11-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இன்னும் 6 கட்ட தேர்தல் நடைபெற வேண்டி உள்ளது. இதனால் நாடு முழுவதும் மிக தீவிரமாக பிரசாரம் நடந்து வருகிறது. இதற்கிடையே தேர்தல் பிரசாரத்தில் சாதி, மதம் தலை தூக்கி இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையருக்கு நாடு முழுவதும் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் சாதி, மதம் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் சாதி, மதத்தை வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்களை கோர்ட்டு தடுக்க வேண்டும் என்று கூறி இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு தொடர்ந்தவரும், தேர்தல் ஆணைய வழக்கறிஞரும் ஆஜராகி வாதாடினார்கள். அப்போது நீதிபதிகள், "சாதி, மதத்தை தூண்டி விட்டு வாக்கு சேகரிக்க நினைக்கும் வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

அதற்கு தேர்தல் ஆணையம் வழக்கறிஞர் பதில் அளித்து கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. மேலும் வேட்பாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறோம். மற்றபடி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. குறிப்பாக விதிகளை மீறும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது உள்ளிட்ட எந்த அதிகாரமும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கிடையாது. இவ்வாறு அந்த வக்கீல் கூறினார்.

சாதி, மதத்தை கையாண்டு எந்த வேட்பாளராவது பிரசாரம் செய்ய முயன்றால் அவர்கள் மீது அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கும் அதிகப்பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி அத்தகைய வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள். 


மக்கள் கருத்து

பேட்ட வேலன்Apr 16, 2019 - 10:10:57 PM | Posted IP 141.1*****

எந்த கட்சி ஜாதி பார்க்காமல் வேட்பாளரை நிறுத்துகிறது. யுவர் ஆனர்.

ராமநாதபூபதிApr 16, 2019 - 10:06:52 AM | Posted IP 162.1*****

மதத்தை சொல்லி ஒட்டு கேட்டது முழுக்க உன் கூட்டணிதான் முட்டாப்பயலே

சாமிApr 15, 2019 - 10:26:15 PM | Posted IP 172.6*****

அப்படின்னா திமுக கூட்டணி அவ்ளோபெறும் அவுட்டா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory