» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டிக்டாக் செயலிக்கு மதுரை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

திங்கள் 15, ஏப்ரல் 2019 12:30:52 PM (IST)

டிக்டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது..

​டிக்டாக் செயலியினால், இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்வதாகவும், சமூகத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுவதாகவும் எழுந்த புகாரை அடுத்து, அந்தச் செயலிக்குத் தடை விதிக்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடந்த 3-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அந்தச் செயலியை உருவாக்கி, அறிமுகப்படுத்திய சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

அதில், டிக் டாக் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் சீன நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்து விட்டது. மேலும், வழக்கின் மறுவிசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory