» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வயநாட்டில் ராகுலுக்கு எதிராகப் போட்டியிடப் போவது யார்?: வேட்பாளரை அறிவித்தார் அமித் ஷா!!

திங்கள் 1, ஏப்ரல் 2019 5:12:01 PM (IST)

கேரள மாநிலம் வயநாட்டில் ராகுலுக்கு எதிராகப் போட்டியிடும் வேட்பாளரை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அமேதி மக்களவைத் தொகுதி, ராகுல் காந்தியின் பாரம்பரிய  தொகுதியாகும். இத்தொகுதியில் வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதேபோல், 2ஆவது தொகுதியாக தென் மாநிலங்கள் ஏதேனும் ஒன்றில் ராகுல் காந்தி போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி நேற்றுஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை தில்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சருமான ஏ.கே. அந்தோணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.

இந்நிலையில் வயநாட்டில் ராகுலுக்கு எதிராகப் போட்டியிடப் போவது யார்? என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: வயநாடு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத தர்ம ஜன சேனா அமைப்பின் தலைவரான துஷார் வெல்லப்பலி போட்டியிடுவார் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறேன். 

துடிப்பான, இளமையான மற்றும் செயல்திறம் மிக்க தலைவரான அவர், வளர்ச்சி மற்றும் சமூக நீதி தொடர்பான எங்களது கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார். இத்துடன் கேரளாவின் மாற்று அரசியல் சக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி உருவெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் கேரளாவில் பாஜ கட்சியானது பாரத தர்ம ஜன சேனா மற்றும் கேரள காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

உண்மைApr 3, 2019 - 03:19:19 PM | Posted IP 141.1*****

ராகுல் வெல்லட்டும். நாட்டைப் பிடித்த ராகு காலம் முடியட்டும்..

மகாராஜாApr 2, 2019 - 10:34:56 AM | Posted IP 103.1*****

ippo poluthu . tuty online . (BJP + STERLITE ) Nanban

சாமிApr 1, 2019 - 08:44:45 PM | Posted IP 172.6*****

கேரளாவில் பப்பு மண்ணை கவ்வுவார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory