» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிஎம் நரேந்திர மோடி படத்தை வெளியிட தடையில்லை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

திங்கள் 1, ஏப்ரல் 2019 3:33:19 PM (IST)

பிரதமர் மோடியின் பயோஃபிக் படத்தை வெளியிட தடையில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பி.எம். நரேந்திர மோடி படத்தில் விவேக் ஓபராய் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் 5ம் தேதி வெளியாகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை மக்களவைத் தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், அந்த கோரிக்கை நிராரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை அதற்கு முன்னர் வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும். பாஜக இந்த திரைப்படத்தை வெளியிட்டு விளம்பரம் செய்கிறார்கள். அதனால் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

அதையடுத்து, இந்த விவகாரத்தில் திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர்கள், இந்த திரைப்படத்தை விளம்பரம் செய்த பத்திரிகை நிறுவனங்கள் ஆகியோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக் காலம் தொடங்கி, அவர் அரசியலில் தடம் பதித்தது, பிரதமராக பதவி வகித்தது வரையிலான வாழ்க்கை வரலாறு குறித்து உருவாகியுள்ள இந்த திரைப்படம், 23 மொழிகளில் நாடு முழுவதும் ஏப்ரல் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஹிந்தி இயக்குநர் ஓமுங்க் குமார் இயக்கிய இந்த திரைப்படத்தை சுரேஷ் ஓபராய் மற்றும் சந்தீப் சிங் உள்ளிட்டோர் தயாரித்தனர். 


மக்கள் கருத்து

இவன்Apr 1, 2019 - 06:23:02 PM | Posted IP 141.1*****

அதன் பெயர் மோடியின் மன்றம் மாற்றுங்க ...மாட்டு மூத்திர மண்டையர்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory