» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 6 மாதம் அவகாசம்: மத்திய அரசு அறிவிப்பு

திங்கள் 1, ஏப்ரல் 2019 11:56:36 AM (IST)

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க காலஅவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நிரந்தர கணக்கு எண்ணுடன் (PAN) ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். அவ்வாறு இணைக்கப்பட்டுவிட்டால் வருமான வரிக் கணக்கை எளிதாக தாக்கல் செய்துவிட முடியும். அப்படி செய்யாத பட்சத்தில் மிகவும் சிரமம் என்று மத்திய நேரடி வரி வருவாய்த் துறை மூத்த அதிகாரி கூறினர். கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என ஜூன் மாதம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், இந்த காலஅவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிரந்த எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 6-வது முறையாக நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.இதுவரை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இப்போதாவது இணைத்திடுங்கள். இன்று முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு ஆதார் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory