» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தானிலேயே பயங்கரவாதிகளை கொன்றது காங்கிரஸ்க்கு பதற்றம் : பிரதமர் மோடி

சனி 30, மார்ச் 2019 8:47:45 PM (IST)

பாகிஸ்தானிலேயே பயங்கரவாதிகளை கொன்றது காங்கிரஸ் கட்சிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

அஸாம் மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: வரலாற்றிலேயே முதன்முறையாக பாகிஸ்தானிலேயே பயங்கரவாதிகளை நாம் வீழ்த்தியுள்ளோம். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு அது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியை தவிர ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பக்கம் நின்றது. மேலும் இந்த சம்பவத்தால் காங்கிரஸ் கட்சி தனது தூக்கத்தை இழந்து தவித்து வருகிறது.இந்தியா தனது சக்தியை விண்வெளி வரை நீட்டித்துள்ளது. 

அதில் மக்களாகிய உங்களுக்கு மகிழ்ச்சி என்பது எனக்கு தெரியும். ஆனால், காங்கிரஸ் கட்சி அதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளது. நம்நாட்டிலுள்ள ஏழைகளும், ஒடுக்கப்பட்டவர்களும், பழங்குடியினத்தவர்க ளின் உரிமைகளுக்காக நான் தொடர்ந்து போராடி வருகிறேன். இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் உதவித்தொகை மாதம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியால் கிடப்பில் போடப்பட்ட அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் பாஜக அரசால் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

இவன்Sep 25, 1554 - 11:30:00 AM | Posted IP 141.1*****

கருப்பன் குசும்பன் ஓட்டு பிச்சை கேக்குறான்

jamaMar 31, 2019 - 12:24:08 PM | Posted IP 141.1*****

உலக செய்தி சேல்கள் ஒரு ஆணியையும் புடுங்கலேன்னு சொல்லுறாங்க.நீங்க மட்டும் வாயில வட சுடுறீங்க.எப்படி.

சாமி 2Mar 30, 2019 - 11:55:04 PM | Posted IP 162.1*****

வாயாலே வடை

சாமிMar 30, 2019 - 09:31:15 PM | Posted IP 172.6*****

சிறப்பாக சொன்னீர்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory