» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜகவை விட்டு தாமதமாக வெளியேறியுள்ளார் : சத்ருகன் குறித்து மகள் சோனாக்‌ஷி கருத்து!

சனி 30, மார்ச் 2019 4:41:35 PM (IST)

தனது தந்தை சத்ருகன் சின்ஹா பாஜகவை விட்டு தாமதமாக வெளியேறியுள்ளார் என அவரது மகள் சோனாக்‌ஷி கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகரான சத்ருகன் சின்ஹா கடந்த முப்பது ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்தார். அண்மைக்காலமாக நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜக அரசின் போக்கை சத்ருகன் சின்ஹா தொடர்ந்து விமர்சித்து வந்தார். பிகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்று மக்களை உறுப்பினராக பொறுப்பு வகித்தவர் சத்ருகன் சன்ஹா. ஆனால், வரும் மக்களவைத் தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து சத்ருகன் சின்ஹா காங்கிரஸில் இணைகிறார். மேலும் பாட்னா சாஹிப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சத்ருகன் சின்ஹா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மத்திய தேர்தல் குழுவும் அறிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸில் சத்ருகன் சின்ஹா இணைவது குறித்து அவரது மகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சோனாக்‌ஷி சின்ஹா, "பாரதிய ஜனதா கட்சியில் சத்ருகன் சின்ஹாவுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. அவர் பாஜகவை விட்டு தாமதமாக வெளியேறியுள்ளார். நீண்டகாலத்திற்கு முன்பே அவர் விலகியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory