» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில் டிக்கெட்டுகள் மற்றும் டீ கப்களில் பிரதமர் மோடி படம்: தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ்

சனி 30, மார்ச் 2019 12:24:57 PM (IST)

ரயில்வே டிக்கெட்டுகள் மற்றும் டீ கப்களில் பிரதமர் மோடி படம் அச்சடிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க ரயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் ரயில்வே டிக்கெட்டுகள் மற்றும் டீ கப்களில் நானும் காவலாளி என்ற வாசகம், பிரதமர் மோடி படம் இடம் பெற்றது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் பறந்தன. இதனையடுத்து ரயில்வே டிக்கெட்டுகள் மற்றும் டீ கப்களில் பிரதமர் மோடி படம் இடம் பெற்றது குறித்து விளக்கம் கேட்டு ரயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

பிரதமர் மோடி படம் அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் தரப்படுவது பற்றி பதிலளிக்கவும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிரதமர் மோடி படம் அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் தரப்படுவது பற்றி கடந்த சில தினங்களுக்கு முன் புகார் எழுந்தது. இது குறித்து விளக்கமளித்த ரயில்வே நிர்வாகம் கவனக்குறைவாக இந்த தவறு நிகழ்ந்து விட்டதாகவும், இந்த டீ கப்கள் வாபஸ் பெறப்படும் எனவும் விதிமீறலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரிடம் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory